சென்னையில் விடிய விடிய சோதனைbr/1000 பேர் கைது - கோட்டையில் வாகனத் தடை
சென்னை:
தீவிரவாத தாக்குதல் அச்சம் காரணமாக சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடந்தது. இதில் சந்தேகத்திற்குட்பட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை பகுதியில், இரவு நேரங்களில் வாகனம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாகவும், பெரும் நாச வேலைகளில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவு மாநில காவல்துறையை எச்சரித்துள்ளது.
இதையடுத்து சென்னை நகரில் பாதுகாப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. நகரின் முக்கியப்பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஸ் நிலையங்களில் பேருந்துகளில் இருந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. விடுதிகள், ஹோட்டல்களிலும் போலீஸார் ரெய்டு நடத்தி யார் யார் தங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் சென்னை நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் நேற்று இரவு முழுவதும் வாகன சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை வழியாக செல்லாமல் வேறு வழியில் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications