வீட்டை விட்டு ஓடி வந்த பெண்ணை கடத்திbr/பணம் பறிக்க முயன்ற மாணவர்கள் கைது
சென்னை:
கணவருடன் கோபித்துக் கொண்டு திருச்சியிலிருந்து சென்னைக்கு ஓஏடி வந்த பெண்ணைக் கடத்தி வைத்து, பணம் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி அருகே உள்ள மேலமருதூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சுதா (21). கணவரிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்துவிட்டார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கியவருக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. சுதா வெகுநேரமாக தனியாக சுற்றியதை கவனித்த வினோத்குமார் என்ற கல்லூரி மாணவர் அவருக்கு அடைக்கலம் கொடுப்பதாக சொல்லி அழைத்துச் சென்றுள்ளார்.
சென்னையில் உள்ள யானைக்கவுனி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் சுதாவை தங்க வைத்து விட்டு தனது நண்பர்களை லாட்ஜூக்கு அழைத்து வந்தார் வினோத்.
அங்கு வந்த தன் நண்பர்களான பாஸ்கர் (26), உமேஷ்குமார் (24), ஜெகநாதன் (21) மற்றும் ராஜ்குமார் (20) ஆகியோருடன் சேர்ந்து, சுதாவை பயன்படுத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர்.
சுதாவிடம் உதவி செய்வதாக சொல்லி அவரின் கணவர் அசோக்கின் போன் நம்பரை வாங்கிய வினோத், அசோக்கிற்கு போன் செய்துள்ளார்.
அசோக்கிடம், உன் மனைவி எங்களிடம் தான் இருக்கிறார். அவர் உயிருடன் வேண்டுமென்றால் ரூ.1 லட்சம் பணத்தை கொண்டு வந்து கொடுத்தால் தான் அவரை உயிருடன் விடுவோம் என்று சொல்லி மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டலை கேட்ட அசோக் சுதாரித்துக்கொண்டு, அவர்கள் இருக்கும் லாட்ஜின் முகவரியை வாங்கிக் கொண்டார். பின்னர் திருச்சியில் இருந்து யானைக்கவுனி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவலை கூறியுள்ளார்.
இதையடுத்து சாதாரண உடையில் மாணவர்களைத் தொடர்பு கொண்ட போலீஸார், தங்களை சுதாவின் உறவினர்கள் என்று கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் வினோத்தை அவர் சொன்ன இடத்திற்குச் சென்று சந்தித்தனர்.
பிறகு லாட்ஜிற்கு அழைத்து சென்ற வினோத்தை பின்தொடர்ந்த மற்ற போலீசார் வினோத் மற்றும் கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தனர்.
சுதா மீட்கப்பட்டு அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார். வினோத் பி.எஸ்.சி. படித்து வருகிறார். மற்றவர்களும் கூட மாணவர்களாவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications