குத்துவிளக்கால் அடித்து மனைவி படுகொலைbr/நெல்லையில் பயங்கரம் - கணவன் கைது
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் வீ.கே.புதூர் அருகே மனைவியை குத்து விளக்கால் அடித்துக் கொன்றார் கணவர்.

நெல்லை மாவட்டம் வீ.கே.புதூர் அருகே உள்ள வீராணத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மனைவி தான்தோன்றியம்மாள்.
இவர்களுக்கு வேல்ம்மாள், சுமதி என்ற 2 மகள்களும், மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி தற்போது தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர்.
வெள்ளத்துரை வீராணத்தில் உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்தில் வாட்மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த 10 நாட்களாக வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார் வெள்ளைத்துரை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றிரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வெள்ளத்துரை அருகில் இருந்த குத்துவிளக்கை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயமடைந்த தான்தோன்றியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குத்து விளக்கு இரண்டாக உடைந்தது.
தகவல் அறிந்ததும் ஆலங்குளம் டி.எஸ்.பி கிங்கிலின், வீ.கே புதூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வெள்ளத்துரையை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications