அணு ஒப்பந்தம்: பிரணாப் தலைமையில் 15 பேர் குழு!
டெல்லி:
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஆராய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் இதை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. இப்படி இரு தரப்பும் இரு முனையில் பிடிவாதமாக இருப்பதால், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண குழு ஒன்றை அமைத்து அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஆராய தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய 15 பேர் கொண்ட குழு நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி செயல்படுவார். இக்குழுவில் அரசு சார்பில் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், கபில் சிபல், சைபுதின் சோஸ், பிருத்விராஜ் செளகான், லாலு பிரசாத் யாதவ், டி.ஆர். பாலு, சரத்பவார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி, ஏ.பி.பர்தான், டி.ராஜா, தேவப்பரதா பிஸ்வாஸ், டி.ஜே.சந்திரசூடன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குழு உறுப்பினர்கள் குறித்த விவரத்தை செய்தியாளர்களிடம் வெளியிட்ட பிரணாப் முகர்ஜியிடம், குழுவின் முதல் கூட்டம் எப்போது நடக்கிறது, அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா போன்ற கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications