ஏக்கருக்கு ரூ. 2 லட்சம், வீட்டில் ஒருவருக்குbr/வேலை: டாடாவுக்கு காங்கிரஸ் கோரிக்கை
சென்னை:
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமையவிருக்கும் டாடாவின் டைட்டானியம் தொழிற்சாற்சாலைக்கு காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனால் கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தலைமையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து டாடா ஆலை அமைவது குறித்த தாங்கள் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை அளித்தனர்.
அந்த அறிக்கையில், டைட்டானியம் தொழிற்சாலை அமையவுள்ள பகுதியில் விவசாய நிலங்களை வைத்திருப்பவர்களில் சிலர் இத்தொழிற்சாலை அமைவதை எதிர்க்கின்றனர். ஆனால் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் இந்த தொழிற்சாலையை வரவேற்கிறார்கள்.
இந்தத் திட்டம் தொடர்பாக சிலர் அரசுக்கு எதிராக வதந்திகளை பரப்பி வந்துள்ளனர். முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தந்துள்ளனர்.
இத் திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது குடியிருப்பு பகுதிகளிலிருந்து 1 கி.மீக்கு அப்பால் தான் கையகப்படுத்த வேண்டும். நீர் ஆதாரங்கள் இருக்கும் பகுதிகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் மணல் அள்ளக் கூடாது.
வழிபாட்டு ஸ்தலங்கள், கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் போன்றவை பாதிக்கப்படக் கூடாது. நிலங்கள் கையகப்படுத்தப்படும் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை டாடா நிறுவனம் செய்து தர வேண்டும்.
டாடா நிறுவனம் கையகப்படுத்தும் நிலத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு தலா 2 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நிலம் கொடுப்பவர்களின் குடும்பத்தாருக்கு கண்டிப்பாக ஒருவருக்கு டாடா நிறுவனத்தில் வேலை கொடுக்க வேண்டும்.
மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளை டாடா நிறுவனம் அமைக்க முன் வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications