புலி 'சூப்' தயாரித்து விற்ற பெண் கைது!!
ஹனோய்:
வியட்நாமின் ஹனோய் நகரில் புலியின் எலும்புகளைக் கொண்டு சூப் தயாரித்து விற்ற பெண்ணைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் வீட்
டு ஃபிரிட்ஜில் 2 புலிகளின் பதப்படுத்தப்பட்ட உடல் மற்றும் வேறு சில வன விலங்குகளின் உல் பாகங்களும் கைப்பற்றப்பட்டன.
40 வயதாகும் அந்தப் பெண், புலிக் கறியை தனது வீட்டின் வெளிப்புறத்தில் வைத்து சமைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மருந்து தயாரிப்பதற்காக புலிகளைக் கொன்று ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்ததாகவும், புலி சூப் தயாரித்ததாகவும் அந்தப் பெண்மணி கூறியுள்லார்.
இதற்காக 3 சமையல்காரர்களையும் அவர் சம்பளத்திற்கு வைத்திருந்தார். தற்போது நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த புலி மருந்தை 100 கிராமுக்கு 800 டாலர் என விலை வைத்து விற்று வந்துள்ளார் அப்பெண். அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வெளியே உள்ள சிற்றுண்டி விடுதிக்கு தினசரி நிறையப் பேர் வருவார்கள்.
அவரது சமையல் கட்டிலிருந்து வித்தியாசமான வாடை வருவதை பார்த்த சிலர் இதுகுறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் வந்து விசாரித்தபோதுதான் புலியை சமையல் செய்து வந்தது தெரிய வந்தது.
அப்பெண்ணின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஃபிரிட்ஜிலிருந்து கைப்பற்ற இரு புலிகளும் இந்திய, சீன வகையாகும். இரண்டும் தலா 250 கிலோ எடை கொண்டவை. ஒரு புலி 20 ஆயிரம் டாலர் விலை மதிக்கத்தக்கதாகும். மியான்மர் அல்லது லாவோஸிலிருந்து இவை வாங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஆம்புலன்ஸ் அல்லது சவப்பெட்டிகளில் வைத்து இந்தப் புலிகள் ெகாண்டு வரப்பட்டிருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதவிர நான்கு கரடிகளின் தாடைகள், யானைத் தந்தங்கள் மற்றும் வேறு சில காட்டு விலங்குகளின் உடல் பாகங்களும் இந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம்தான் புலிக்கு விஷம் வைத்துக் ெகான்றதாக 8 பேருக்கு வியட்நாம் நீதிமன்றம் தலா 11 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications