ஆசிரியர் தினத்திற்கு விடுமுறை விடாததால்br/பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
திருச்சி:
ஆசிரியர் தினத்திற்கு விடுமுறை விடப்படாததால் ஆத்திரமடைந்த சில பெற்றோர்கள், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருச்சி பாலக்கரையில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி பள்ளியிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளி நிர்வாகம் விடுமுறை கிடையாது என மறுத்து விட்டது.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பள்ளியில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து பள்ளிக்கூடம், சமுதாய மையம், பள்ளி வளாகத்தையொட்டி அமைந்துள்ள சகாய மாதா சர்ச் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்தது. விடுமுறை விடப்படாத ஆத்திரத்தில் பெற்றோர்களில் சிலர்தான் இந்தப் புரளியைக் கிளப்பியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பின்னர் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications