நாடாளுமன்றத்தில் மீண்டும் அமளிbr/இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை மக்களவை கூடியதும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் எம்.பியாக தேர்வு பெற்றுள்ள சுமன் மகதோ பதவியேற்றுக் கொண்டார். பின்னர் கேள்வி நேரம் எடுக்கப்படுவதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
அப்போது எழுந்த பாஜக தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக அவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.
அவருடன் பிற பாஜக உறுப்பினர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களும் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது.
தொடர்ந்து அமளியாக இருந்ததால் முதலில் பிற்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார் சாட்டர்ஜி. பிறகு 12 மணிக்கு கூடியபோதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார் சோம்நாத் சாட்டர்ஜி.
இதேபோல ராஜ்யசபாவிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்ததால் அங்கும் அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவையை அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.
நேற்றும் இதே கோரிக்கை காரணமாக இரு அவைகளும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications