சாலை விபத்தில் தந்தை, மகன் பலி
சென்னை:
சென்னை குரோம்பேட்டையில் இன்று காலை நடந்த கோர விபத்தில் தந்தையும், மகனும் பரிதாபமாக பலியானார்கள்.
சென்னையை சேர்ந்த தனியார் கம்பெனியில் கணக்காளராக வேலை பார்ப்பவர் வெங்கடேசன் (45). இவரது மகன் சந்தோஷ் (8). சைதாப்பேட்டை புனித மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 3வது வகுப்பு படித்து வந்தான் சந்தோஷ்.
இன்று காலை தாம்பரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மகனுடன் சென்றார் வெங்கடேசன். பின்னர் மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னையில் நேற்று பெய்த கனமழையால ரோடுகள் மிகவும் சேதமடைந்துள்ளன. ஜி.எஸ்.டி. சாலையில் அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது குரோம்பேட்டை பகுதியில் மழையால் ஏற்பட்டிருந்த பெரும் பள்ளத்தைப் பார்த்த அவர் வண்டியை மெதுவாக ஓட்டினார்.
அப்போது அவருக்குப் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து வெங்கடேசனின் வண்டி மீது மோதியது. இதில் வெங்கடேசனும், அவரது மகனும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். தாம்பரம் போக்குவரத்து போலீசார், இருவரின்
உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தின் ஓட்டுநர் டிரைவர் தப்பி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications