யாழ்ப்பாணம் சண்டையில் 5 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணம் அருகே நடந்த கடும் சண்டையில் 5 விடுதலைப் புலிகளை சுட்டுக் கொன்றதாக ராணுவம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் அருகே விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இரு தரப்பும் மிகக் கடுமையாக மோதிக் கொண்டன. இந்த சண்டையில் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் நடந்த மற்றொரு சண்டையில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கொழும்பு புறநகர்ப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கிலோ வெடிபொருளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொழும்பில் தாக்குதல் நடத்த இது கடத்தி வரப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications