தொகுதி நீக்கம்: கண்டித்து திருவட்டாரில் பந்த்
Subscribe to Oneindia Tamil
திருவட்டார்:
தொகுதி சீரமைப்பின் கீழ் திருவட்டார் சட்டசபைத் தொகுதியை நீக்கியதைக் கண்டித்து திருவட்டாரில் இன்று பந்த் நடத்தப்பட்டது.
திருவட்டார் தொகுதியை நீக்கியதைக் கண்டித்து தொடர்ந்து அங்கு பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று பந்த் நடத்தப்பட்டது.
இதனால் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன. திருவட்டார் தொகுதி முழுவதும் ரோடுகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
திருவட்டார் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் கடைகள் முழுவதும் மூடப்பட்டிருந்தன. செறுதிவனம் என்ற இடத்தில் ரோட்டின் குறுக்கே கல், மரம் ஆகியவற்றை போட்டு தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications