வெளிநாட்டிலிருந்து சிமென்ட் வருகிறது;br/விலை விரைவில் குறையும் - பொன்முடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிமென்ட் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையை சரிக்கட்ட வெளிநாட்டிலிருந்து சிமென்ட் இறக்குமதி செய்யப்படும் என உயர் கல்வித் Ponmudiதுறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சிமென்ட் விலை உயர்வைக் கண்டித்து பாமக போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிமென்ட் விலையைக் குறைக்க வெளிநாட்டு சிமென்ட் வரவுள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, தமிழ்நாடு சிமெண்ட கழகத்தின் மூலம் மாதம் ஒன்றுக்கு 1,50,000 டன் என்ற வீதத்தில் 18 லட்சம் டன் சிமெண்ட்டை உலகளாவிய ஒப்பந்தம் மூலம் நேரடியாக இறக்குமதி செய்திட முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் மினரல்ஸ் மற்றும் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் மூலம் 5 லட்சம் டன் சிமெண்ட் இறக்குமதி செய்வதற்கும், தமிழ்நாடு சிமெண்ட் கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிமெண்ட் தேவையான அளவுக்கு கிடைக்கும். சிமெண்ட் விலையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+