பாமாயில், பருப்பு, மைதா எங்கே?
திருநெல்வேலி:
ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த பாமாயில், பருப்பு, மைதா, ரவை போன்றவை தற்போது வழங்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பருப்பு உள்லிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக இருந்ததால், மக்கள் நலனுக்காக, நியாய விலைகடைகளில் பாமாயி, பருப்பு, ரவை உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து நியாய விலைக்கடைகளில் அரிசி, மண்ணெணை, சீனி, கோதுமை, தேயிலை, உப்பு ஆகியவற்றோடு, ரவை, மைதா, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவையும், சில மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இத்திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் நெல்லை மாவட்டத்தி்ல திடீரென மேற்கண்ட பொருட்கள் நியாய விலைக்கடைகளுக்கு விற்பனைக்கு வராமல் நின்றுவிட்டது.
பொது மக்கள் நியாய விலைக்கடைகளில் கேட்டு திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடோன்களுக்கும் மேற்கண்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இத்திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications