சிமென்ட் விலை உயர்வு: நெல்லையில் பா.ம.க ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி:
சிமெண்ட் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 8ம் தேதி நெல்லையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
நெல்லையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி குறித்த
ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற ஓமலூர் எம்.எல்.ஏ தமிழரசு பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் திருட்டுதனமாக மணல் அள்ளப்படுவதை கண்டித்து ராமதாஸ் போராட்டம் நடத்தி பின்புதான் திருட்டு மணல் அள்ளப்படுவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு கூலித் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது.
இதை கண்டித்து வரும் 8-ந் தேதி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. நெல்லையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications