ராஜஸ்தானில் பயங்கர விபத்து: 100 பக்தர்கள் பலி
உதய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அருகே மலைப் பகுதியில் லாரி கவிழ்ந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியானார்கள்.
ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பிரபல சுஃபி முனிவர் ராம்தேவ்ராவின் ஆலயத்திற்கு இந்துக்களும், முஸ்லீம்களும் பெருமளவில் சென்று வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு லாரிகள், வேன்கள், பேருந்துளில் வந்து கொண்டிருந்தனர். இரவு 8 மணியளவில் ராஜசமுந்த் மாவட்டம் தேசுகிரி கி நால் கிராமம் அருகே உள்ள மலைப் பகுதியில் வரிசையாக பக்தர்களுடன் லாரிகள் வந்து கொண்டிருந்தன.
அப்போது ஒரு லாரி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு தாறுமாறாக ஓடி மலையிலிருந்து உருண்டு விழுந்தது.
விழுந்த வேகத்தில் லாரியின் அடியில் சிக்கி பக்தர்கள் நசுங்கினர். இதில் குறைந்தது 100 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 130 பேர் படுகாயமடைந்தனர்.
இரவு நேரத்தில் விபத்து நடந்ததால், மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது. கிரேன்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. உடல்களை மீட்டு அவை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. சில உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளன.
விபத்தில் சிக்கிய லாரி, ராஜசமுந்த்திலிருந்து ஜோத்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 200 பேர் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications