திருச்செந்தூர் முருகன் கோவிலில்br/ரூ.5.43 கோடியில் திருப்பணிகள்
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் உள்ள புகழ் பெற்ற சுப்ரமணியசுவாமி கோவிலில் ரூ. 5.43 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இதைத் தொடங்கி வைக்கிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கிரி பிரகாரங்களில் 44.50 லட்சம் ரூபாய் செலவில் கருங்கல் பதிப்பு, நாலுமூலைக் கிணறு தேரி நிலத்தில் 47.50 லட்சம் ரூபாய் செலவில் புதிய கோசாலை, 36 லட்சம் ரூபாய் செலவில் கோசாலை சுற்றுசுவர் அமைக்கப்படவுள்ளன.
இதுதவிர 30 லட்சம் ரூபாய் செலவில் நாழிக்கிணறு பஸ் நிலையம் அருகில் புதிய சுகாதார வாளகம், கந்தவேல் சஷ்டி விரத மண்டபத்தில் 12 லட்சம் ரூபாய் செலவில் புதிய கழிவறைகள், 48 லட்சம் ரூபாய் செலவில் வேலன்விடுதி மேம்பாடு, 80 லட்சம் ரூபாய் செலவில் ஜெயந்திநாதர் விடுதி புதுப்பித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், 18.50 லட்சம் ரூபாய் செலவில் கோவில் வாளகத்தில் புதிய மின்கோபுரம், 11.60 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஒலி, ஒளிப்படகருவிகள் பொருத்துதல், 31 லட்சம் ரூபாய் செலவில் மகாமண்டபத்தில் நவீன குளிர்சாதன வசதி, 48 லட்சம் ரூபாய் செலவில் நவீன முடிக்கணிக்கை செலுத்துமிடம், 46 லட்சம் ரூபாய் செலவில் சண்முகவிலாச மண்டபம், மகா மண்டபத்தில் துருபிடிக்காத கம்பியிலான முறைவரிசை, கதவுகள் அமைத்தல், 60 லட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம் அருகில் புதிய தகவல் நிலையம் ஆகியவை அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 5.43 கோடி ரூபாய் செலவில் இந்தத் திருப்பணிகள் நடைபெறவுள்ளன. இப்பணிகளுக்கான கால்கோல் விழா, அறங்காவலர் குழு தலைவர் தேவதாச சுந்தரம் உபயமாக பொறித்துள்ள பக்தி பாடல் குறுந்தகடு வெளியிட்டு விழா ஆகியவை இன்று இரவு 7.30 மணிக்கு கோவிந்தசாமி கலையரங்கில் நடைபெறுகிறது.
செய்திதுறை செயலாளர் ராஜேந்திரன், அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, கலெக்டர் பழனியாண்டி ஆகியோர் பேசுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications