குணமடைந்தார் சாந்தி - விரைவில் டிஸ்சார்ஜ்
தஞ்சாவூர்:
மாடுகளுக்கு கொடுக்கும் மாத்திரையை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்ற தடகள வீராங்கனை சாந்தி முழுமையாக தேறி விட்டார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என
டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தோகாவில் நடந்த தெற்காசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் சாந்தி. ஆனால் இவருக்கு பெண்களுக்குரிய ஹார்மோன் குறைவாக இருப்பதாக கூறி பதக்கத்தை பறிமுதல் செய்து விட்டனர்.
பாலின சர்ச்சையில் சாந்தி சிக்கினாலும் கூட அவருக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 15 லட்சம் பரிசுத் தொகை மற்றும் ரூ. 1லட்சம் கலர் டிவி ஆகியவற்றை தமிழக அரசு திட்டமிட்டபடி வழங்கி சாந்தியைக் கெளரவித்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் திடீரென தற்கொலைக்கு முயற்சித்தார் சாந்தி. மாடுகளுக்கு வைக்கப்படும் மாத்திரையை சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயராஜ்குமாரும், சாந்தியின் சிகிச்சையில் தீவிர கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில் தற்போது சாந்தி முழுமையாக குணமடைந்து விட்டதாக மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் அம்புஜம் தெரிவித்துள்ளார். இன்றைக்குள் அவர் வீடு திரும்பக் கூடும் எனவும் டாக்டர் அம்புஜம் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications