ராணுவம் - புலிகள் மோதலில் 10 பேர் பலி
கொழும்பு:
இலங்கையின் வடக்கில் உள்ள நாகர்கோவில் பகுதியில் நடந்த சண்டையில் 7 விடுதலைப் புலிகளும், 3 ராணுவத்தினரும் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவத் தரப்பில் கூறுகையில், நாகர்கோவில் பகுதியில் பாதுகாப்பு தடுப்பு அரண்களைத் தாண்டி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவத் தடுப்பை மீறி உள்ளே நுழைய முயற்சித்னர்.
இதைடுத்து ராணுவமும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல, வவுனியா மாவட்டத்தில், குடுருவிட்டான்குளம், தம்பனை, உமயரத்துவரன்குளம் ஆகிய இடங்களில் நடந்த மோதலில் ஐந்து விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை விடுதலைப் புலிகள் தரப்பு உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வருவதைத் தொடர்ந்து அங்கிருந்து 3000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் தெற்கில் உள்ள அரிப்பு, சிலவத்துரை, முல்லைக்குளம், நனட்டன் ஆகிய பகுதிகளிலிருந்து வடக்கு நோக்கி இதுவரை 3109 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பள்ளிக்கூடங்களும், ஒரு மசூதியும் சேதமடைந்துள்ளதாக தமிழர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, சமீபத்தில் புலிகளிடமிருந்து மீட்ட சிலவத்துரை, முல்லைக்குளம் ஆகிய இடங்களில் புதிய முகாம்களை அமைக்க இலங்கை கடற்படை முடிவு செய்துள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications