வங்கதேச மாணவியை வேலூர் கொண்டுbr/வந்து விசாரிக்க போலீஸ் முடிவு
ஹைதராபாத்:
ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, வேலூரில் படித்து வந்த வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை வேலுருக்குக் கொண்டு வந்து விசாரிக்க ஹைதராபாத் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் வேலூரில் உள்ள ஆக்ஸீலியம் கல்லூரியில் படித்து வந்த வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரது சகோதரர் ரிஸ்வான் காஜி என்பவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரப்சஞ்சானியை வேலூர் கொண்டு வந்து விசாரிக்க ஹைதராபாத் போலீஸார் தீர்மானித்துள்ளனர். தற்போது 5 நாள் காவலில் அவரை போலீஸார் எடுத்துள்ளனர்.
வேலூரில் ரப்சஞ்சானியின் பெற்றோர் தங்கியிருந்த ஹோட்டலிலும் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ரப்சஞ்சானிக்கு ராணுவ வீரருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்தும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications