3வது அணியில் இருக்கிறோமா, இல்லையாbr/என்பது சந்தேகமாக உள்ளது - ஜெ.
சென்னை:
3வது அணியில் அதிமுக இருக்கிறதா, இல்லையா என்பது சந்தேகமாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட சில பிரச்சினைகளில் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை.
கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளை மட்டுமே அழைத்துள்ளனர். எங்களுக்கு ஏன் அழைப்பு இல்லை என்று புரியவில்லை.
எங்களைப் பொருத்தவரை நாங்கள் 3வது அணியில் இருக்கிறோம் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அவர்களைப் பொருத்தவரை நாங்கள் 3வது அணியில் இடம் பெற்றிருக்கிறோமா என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் காலம் நெருங்கி வந்து விட்டது என்று அனுமானமாக வரும் செய்திகளுக்கும், தகவல்களுக்கும் எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications