நீதித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நெல்லையில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட மையம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை மாநில செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
போராட்டத்தில் ஷெட்டி கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும். தலைமை எழுத்தாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 5 சதவீதம் தனி ஊதியம் வழங்க வேண்டும். நீதித்துறையில் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பாளர்களின் சம்பள விகிதத்தை 1.3.93 முதல் ரூ.1700 என மாற்றி அமைத்திட வேண்டும்.
மேலும் சுருக்கெழுத்தர்களுக்கு 1.8.92 முதல் ஒருங்கிணைந்த பணி மூப்பு பட்டியல்படி உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.












Click it and Unblock the Notifications