புதுக்கோட்டை மீனவர்கள் ஸ்டிரைக்
புதுக்கோட்டை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட விசைப் படகு மீனவர்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இறால் மீனுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மீனை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், விசை படகிற்கு வழங்கும் டீசலை மானிய விலையில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் 2500 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டத்திற்கு அரசு செப்டம்பர் 14க்குள் தீர்வு காணவேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications