டைட்டானியம் ஆலையை எதிர்த்துbr/சாத்தான்குளம் ஒன்றியத்தில் தீர்மானம்!
சாத்தான்குளம்:
டாடா நிறுவனத்தின் டைட்டானியம் ஆலையை எதிர்த்து சாத்தான்குளம் ஒன்றியத்தில் போடப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்ட கேள்விக்கு ஒன்றியத் தலைவர் விளக்கம் தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார்.
சாத்தான்குளம் ஒன்றியத்தில் டாடாவின் டைட்டானியம் ஆலையை எதிர்த்து போடப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுமா என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர் ஆனந்தராஜுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதற்கு ஒன்றியத் தலைவர் ஆனந்தராஜ் அளித்த விளக்கம் அளித்துள்ளார். அதில், மேற்படி தீர்மானம் சாத்தான்குளம் பகுதியில் டைட்டானியம் தொழிற்சாலையினால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் வேண்டுகோளின்படியும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவின்படியும் நிறைவேற்றப்பட்டது.
கடந்த காலங்களில் சென்னை அருகே துணை நகரத் திட்டத்தையும், சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பொதுமக்கள் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் இத்திட்டங்கள் தமிழக அரசால் கைவிடப்பட்டது என்பதை நாடே அறியும்.
இதே போன்ற எதிர்ப்பு நிலைதான் சாத்தான்குளம் மக்களிடம் உள்ளது. டைட்டானியம் தொழிற்சாலை இப்பகுதியில் அமையுமானால் தங்களின் வாழ்வாதார உரிமை முற்றிலும் பாதிக்கப்படும் என கருதுகிறார்கள். பிறந்த மண்ணிலே அகதிகளாக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்திலும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இத்திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மக்கள் கருத்து கேட்கும் குழுவினரால் தங்களின் எதிர்ப்பு நிலையை தெரிவிக்க பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் சென்றபோது காவல்துறையால் அவர்கள் தடுக்கப்பட்டு ஜனநாயகத்தை கேள்விகுறியாக்கும் வகையில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது.
இச்சம்பவத்தினால் அரசு அமைத்த குழு நடத்துவது கருத்து கணிப்பா அல்லது கருத்து தினிப்பா என்று மக்களிடம் கேள்வி குறி எழுந்து கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் மக்களின் எதிர்ப்பு நிலை அறிந்த ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் டைட்டானியம் ஆலை அமைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவு மக்களுக்கு எதிராக இருக்கிறது என மக்கள் நினைக்கிறார்கள் என்பதை அரசுக்கு தெரிவிக்க சூழ்நிலை ஏற்பட்டது.
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கடிதம் முலம் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்ததனால் அதன் அடிப்படையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களில் தலைவர் உள்பட 10 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மக்களின் எண்ணங்களை அரசுக்கு தெரியபடுத்துவது ஜனநாயக உரிமை மற்றும் கடமையும் கூட. டைட்டானியம் ஆலை மக்களின் மனநிலையை தெரிவிப்பதுதான் தீர்மானத்தின் நோக்கம் என்று சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் ஆனந்தராஜ் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications