ரயில் மோதி 19 சிவ பக்தர்கள் பலி:br/லக்னோவில் பெரும் கலவரம்
லக்னோ:
லக்னோ அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தண்டவாளத்தில் நின்றிருந்த 19 சிவ பக்தர்கள் பலியானார்கள். இதையடுத்து பெரும் திரளான சிவ பக்தர்கள் வன்முறையில் இறங்கியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
லக்னோவிலிருந்து கோரக்பூர் செல்லும் பயணிகள் ரயிலில் ஏராளமான சிவ பக்தர்கள் சென்றனர்.
சரயூ ஆற்றுப் பாலத்தில் ரயில் சென்றபோது ரயில் மிக மெதுவாக சென்றது. அப்ேபாது சில சிவ பக்தர்கள் ரயிலிலிருந்து இறங்கி ஆற்றில் போன நீரை மொண்டு எடுத்துள்ளனர்.
அப்போது எதிர் திசையில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வேகமாக வந்தது. அதைப் பார்த்த சிவ பக்தர்கள் உயிர் தப்ப ஆற்றுக்குள் குதித்தனால். ஆனால் அதற்குள் பக்தர்கள் நின்றிருந்த இடத்தை நெருங்கியதால் 19 பேர் ரயிலில் அடிபட்டு இறந்தனர்.
ஆற்றில் குதித்தவர்களில் சிலரும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைக் கண்டு ஆத்திரமடைந்த சிவ பக்தர்கள் வன்முறையில் இறங்கினர்.
லக்னோ ரயில் நிலையத்திற்குள் புகுந்து சூறையாடினர். நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் அங்கு திரண்டிருப்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications