300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் லாரியில் கடத்தப்பட்ட 300 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் நகர் கேணிக்கரை அருகே நேற்று இரவு போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே வேகமாக ஒரு லாரி சென்றது. அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை விரட்டிச் சென்றனர்.
லாரியை மடக்கி நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், 50 கிலோ எடை கொண்ட 300 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.80 லட்சம் ஆகும்.
லாரி டிரைவர் மணி, அவரது உதவியாளர் பாண்டி, முனியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லாரியில் இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications