முதலிரவு முடிந்ததும் 'எஸ்' ஆனவர் கைது!
சென்னை:
வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணியில் கல்யாணம் செய்து கொண்ட பெண்ணை, முதலிரவு முடிந்தததும் நட்டாற்றில் விட்டு விட்டுத் தலைமறைவானவரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் புளோரா. 25 வயதாகும் இவரது தந்தை தேசிய அளவிலான கேரம் விளையாட்டு வீரர். சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு கேரம் விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
கேரம் கற்றுக் கொள்வதற்காக புளேராவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து அவரது தந்தையிடம் கேரம் கற்று வந்தார். அப்போது ஆனந்த்துக்கும், புளோராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கேரம் விளையாட்டோடு, காதல் 'விளையாட்டிலும்' தீவிர கவனம் செலுத்தி வந்தார் ஆனந்த்.
கடந்த 6 வருடங்களாக நீடித்த இவர்களின் காதல் முற்றி கல்யாணம் செய்ய தீர்மானித்தனர். வீட்டில் சொன்னால் எதிர்ப்பார்கள் என்பதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு ஓடினர். அங்கு வைத்து கல்யாணம் செய்து கொண்ட இருவரும், அங்குள்ள விடுதியில் தங்கினர்.
அன்று இரவு தங்களது முதலிரவை கொண்டாடினர். மறு நாள் காலையில் புளோரா விழித்தெழுந்து பார்த்தபோது ஆனந்த்தைக் காணவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் புளோரா. அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில் சென்னைக்கு வந்தார். ஆனால் அவருக்கு முன்பாகவே ஆனந்த் ஊர் திரும்பியிருந்தார்.
இதை அறிந்த புளேரா அவரிடம் போய் நியாயம் கேட்டார். அதற்கு ஆனந்த், வரதட்சணையாக ரூ 2லட்சம் ரொக்கம், நகை உள்ளிட்டவற்றுடன் வந்தால்தான் எனது வீட்டில் உன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு கொதித்துப் போன புளோரா எழும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் ஆனந்த்தை அழைத்து விசாரித்னர். அவரோ, குடும்பம் நடத்த முடியாது என்று கூறி விட்டார். இதையடுத்து ஆனந்த்தை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications