கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும்br/போராட்டம் - அருந்ததியர்கள் எச்சரிக்கை
திருநெல்வேலி:
தங்களது கிராமத்தில் பல்வேறு நபர்களும் பல்வேறு வகையான இடையூறுகளை செய்வதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தப் போவதாக அருந்ததியர் மகாசபை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அருந்ததியர் மகாசபை மாநில தலைவர் மரியதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், எங்களது குடிருப்பு அருகில் ரகுமான் என்பவர் கயிறு தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். அவரது லாரி எங்களது பகுதி வழியாக வருவதால் குழந்தைகள், முதியவர்கள் சாலைகளில் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தலித் மக்களுக்கு அரசு குடியிருப்பு கட்டி தந்துள்ளது. அங்கு வசிப்பவர்களிடம் உயர் வகுப்புகளை சேர்ந்த பலர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வீடுகளை அபகரித்துள்ளனர். மேலும் வெளியாட்கள் இந்த குடியிருப்பில் சட்டத்திற்கு புரம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர்
தவறுகள் நடப்பதை இப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டால் வழக்கு போடுவதாக போலீசார் மிரட்டுகின்றனர்.
கடையநல்லூர் போலீசார் எங்களது பகுதியை சேர்ந்த 6 பேர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். சங்கரன்கோவில் மதுவிலக்கு போலீசாரும் இங்கு வசிக்கும் மக்கள் மீது பொய் வழக்கு போட முயற்சித்து வருகின்றனர். இதுபற்றி ஏற்கனவே டி.ஐ.ஜி.யிடம் மனு கொடுத்துள்ளோம்.
தினமும் சிலர் எங்களது பகுதியில் அரிவாளுடன் சுற்றி வந்து மிரட்டுகின்றனர். வீடுகள் மீது இரவு நேரத்தில் கல்வீசி அச்சுறுத்துகின்றனர். கூலி வேலை செய்யும் எங்களுக்கு இப்போது ஒருவரும் வேலை கொடுப்பதில்லை.
இத்தகைய இன்னல்கள் காரணமாக தொடர்ந்து துன்பப்பட்டு வருகிறோம். இதனால் கிராமத்தில் குடியிருக்க முடியாக நிலை ஏற்பட்டுள்ளதால் வரும் 19ம் தேதி ஊரை காலி செய்து விட்டு கலெக்டர் அலுவலகத்தில் குடியேற திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications