வெளிநாட்டில் வீட்டு வேலையா?: 10வது 'மஸ்ட்', 30 வயது கட்டாயம்!
துபாய்:
இந்தியப் பெண்கள் வெளிநாடுளில் வீட்டு வேலைக்குச் செல்வதாக இருந்தால் அவர்கள் கட்டாயம் பத்தாவது வகுப்பு வரை படித்திருக்க வேண்டும், வயதும் 30க்கு மேல் இருக்க வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயரால் ரவி கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், வேலைக்குப் போகும் இடங்களில் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையிலேயே இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வேலைக்கு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கும், அவர்களை வேலைக்கு எடுப்போருக்கும் இடையேதான் நேரடியாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். மாறாக ஏஜென்ட்டுடன் ஒப்பந்தம் செய்யக் கூடாது.
வேலைக்குத் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு ப்ரீ பெய்டு செல்போன் வழங்கப்பட வேண்டும்.
முதலில் வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டுமே வயது நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது பத்தாவது வகுப்பைப் படிக்காத அனைத்துப் பெண்களுக்கும் இந்த வயது நிர்ணயம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்திலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இதுதவிர வேலைக்குச் சென்ற இடத்தில் தாங்கள் சந்தக்கும் பிரச்சினைகள் குறித்து இந்திய தூதரகத்தின் உதவியை பெண்கள் நாடுவதற்கு வசதியாக ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்தும் திட்டமும் உள்ளது என்றார் ரவி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications