உதவிக் கரம் நீட்டும் என்.ஆர்.ஐ டாக்டர்கள்
கொல்கத்தா:
20க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்திய டாக்டர்கள் உதவியுடன் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு அருகே அதி நவீன மருத்துவமனை உருவாகிக் கொண்டிருக்கிறது. இங்கு முழுக்க முழுக்க ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த டாக்டர்கள் அனைவரும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் ஆவர்.
மேற்கு வங்க மாநில மக்களுக்கு நல்ல, தரமான சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில் இந்த மருத்துவமனையை எழுப்பி வருகின்றனர்.
ஹவுராவுக்கு அருகே சஞ்சீபன் என்ற பெயரில் இந்த மருத்துவமனை எழுப்பப்படுகிறது. குழந்தைகள் நலம், இதயவியல், காது மூக்குத் தொண்டை உள்ளிட்ட பிரிவுகளில் இங்கு அதி நவீன சிகிச்சை வசதி செய்யப்படும்.
இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷிஸ் மித்ரா கூறுகையில், நாங்கள் 1980களில் மருத்துவம் பயின்றபோது இதுபோன்ற ஒரு மருத்துவ சேவையை அளிக்க வேண்டும் என்று நினைத்தோம். தற்போது அது கைகூடியுள்ளது என்றார்.
மித்ரா, மேற்கு வங்கத்தில் மருத்துவம் பயின்றவர். கடந்த 13 ஆண்டுகளாக அவர் இங்கிலாந்தில் டாக்டராக உள்ளார். தற்போது அயர்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூத்த மருத்துவராக இருக்கும் அவர் தனது வேலையைத் துறந்து விட்டு மேற்கு வங்கம் திரும்புகிறார். சஞ்சீபன் மருத்துவமனைக்கு தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், மருத்துவம் என்பது வியாபாரம் அல்ல. அது ஒரு சேவை. ஆனால் தற்போது உள்ள தனியார் மருத்துவமனைகள் அந்த எண்ணத்தில் செயல்படவில்லை. அவை மாற வேண்டும். அப்போதுதான் மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கும் ஏராளமான ஏழை, எளிய மக்களுக்கு விமோச்சனம் கிடைக்கும் என்றார்.
மித்ரா தற்போது சிகிச்சா புரோதி உத்யோக் என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்புதான் சஞ்சீபனை உருவாக்குகிறது.
மருத்துவ சிகிச்சைக்கு வருவோரின் வசதிக்காக தேசிய நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மருத்து இன்சூரன்ஸ் திட்டத்தையும் சஞ்சீபன் செயல்படவுள்ளதாம்.
மருத்துவமனையில் அனைத்து மருந்துகளையும் குறைந்த விலைக்கு கொடுப்பதற்காக குறைந்த கட்டணத்தில் மருந்துகளைத் தயாரிக்கும் லோகாஸ்ட் என்ற நிறுவனத்துடன் மித்ராவின் அறக்கட்டளை ஒப்பந்தம் செய்யவுள்ளது. மேலும், வடோடராவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து குறைந்த செலவில் மருந்துகளை கொள்முதல் செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் 130 படுக்கைகள் கொண்டதாக இந்த மருத்துவமனை இருக்கும். பின்னர் படிப்படியாக 300 படுக்கைகளைக அதிகரிக்கப்படும். பிற மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆபரேஷன்களுக்கான செலவில் 40 சதவீதமே இங்கு வசூலிக்கப்படும்.
தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ மையமாக இதை மாற்றுவதே தங்களது நோக்கம் என்றும் மித்ரா கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications