கூண்டோடு ராஜினாமா-முஷாரபுக்கு எதிர்க் கட்சிகள் மிரட்டல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான அட்டவணையை அந்நாட்டு தேர்தல் கமிஷன் நாளை வெளியிடவுள்ளது.
இந்தத் தேர்தலில் ராணுவ தளபதி பிளஸ் அதிபர் பதவியில் இருக்கும் முஷாரப் மீண்டும் போட்டியிடுகிறார்.
2 பதவிகளையும் வகித்துக் கொண்டு மீண்டும் போட்டியிடும் அவருக்கு எதிர்க் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிபர் தேர்தலுக்கு முன் தளபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தி வந்தன. ஆனால் இதை ஏற்க முஷாரப் மறுத்து விட்டார்.
இதற்கிடையே தனது வேட்பு மனுவை ஏற்கச் செய்யும் வகையில் தேர்தல் கமிஷனின் விதிகளில் முஷாரப் அவரச திருத்தங்களை செய்துள்ளார்.
இதன்படி யாராலும் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க முடியாது.
இதையடுத்து முஷாரப்புக்கு பாகிஸ்தான் எதிர்க் கட்சிகள் புதிய மிரட்டல் விடுத்துள்ளன.
முஷாரப் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடாது. அவர் போட்டியிட்டால் மாகாண சபைகளில் உள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற எம்பிக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications