மக்களை ஏமாற்றி மின் நிலையமா?-ராமதாஸ்
கடலூர்:
மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து மின்நிலையம் அமைக்க விடமாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கடலூரை அடுத்துள்ள தியாகவல்லி ஊராட்சிப் பகுதியில் ரூ. 6,000 கோடி மதிப்பீட்டில் தனியார் அனல் மின் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து கேட்ட பின்னர் அவர்களிடம் பேசியதாவது,
நான் உங்களை அரசியல் கட்சி சார்பாக சந்திக்க வரவில்லை. கடந்த 13ம் தேதி தமிழர் உழவர் பேரியக்கம் என்ற இயக்கத்தை தொடங்கினேன். அந்த இயக்கத்தின் கொள்கை, மண்ணை காப்போம், மக்களை காப்போம் என்பதுதான். அதன் அடிப்படையில் உங்களை சந்திக்க வந்துள்ளோம்.
இங்கே உங்களை யாரும் தூண்டிவிடவில்லை. பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுத்தால் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறேன் என்கிறார்கள்.
நிலங்களை எடுக்கிறார்கள் என்றதும் மின்சாரம் போன்று உங்களுக்கு ஷாக் அடிக்கிறது. வேறு இடத்தில் மின்சாரத்தை தயாரியுங்கள். மக்களின் வாழ்வாதரத்தை அழித்துத்தான் மின்சாரம் தயாரிக்க வேண்டுமா
1894ம் ஆண்டில் வெள்ளையன் போட்ட நில ஆர்ஜித சட்டத்தில் 1974ம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வந்து, நிலத்தை ஆர்ஜிதம் செய்கிறேன் என மக்களை ஏமாற்ற முடியுமா, இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த 7ம் தேதி நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்த முயன்றதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இதற்காக மக்கள் மீது காவல்துறை போட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும்.
இயற்கையாக வாழ்கின்ற இந்த சூழலை கெடுக்கக்கூடாது. இங்கு தொழிற்சாலை வேண்டாம் என்று அனைத்து மக்களும் சொன்னார்கள். அதுதான் மகேசன் தீர்ப்பு. இங்கு தொழிற்சாலை வராது.
உங்கள் நியாயமான கோரிக்கையை முதல்வரிடம் பேசி, மின்நிலையம் அமைவதை தடுப்பேன் என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications