'ராமர்': கருணாநிதியுடன் சோனியா ஆலோசனை!
டெல்லி:
ராமர் பாலப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவைத் திரும்பப் பெற்றது தொடர்பாக முதல்வர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அரசின் நிலையையும் விளக்கினார்.
ராமர் பாலம் தொடர்பான வழக்கில், மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ராமர் இருந்ததற்கும், ராமர் பாலத்தை அவர்தான் கட்டினார் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பாஜகவினர் பெரும் கொந்தளிப்புடன் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். அத்வானி, நேரில் பிரதமரைச் சந்தித்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பதில் மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது. மேலும், இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையைத் தயார் செய்த தொல்பொருள்துறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முதல்வர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மதவாதிகளின் நெருக்குதலுக்கு மத்திய அரசு பணியக் கூடாது, மனுவைத் திரும்பப் பெற்றது தவறு என்று அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மனு வாபஸ் பெறப்பட்டது குறித்து அவர் விளக்கினார். மேலும், இந்த விவகாரத்தில் கருணாநிதியின் ஆலோசனையையும் அவர் பெற்றதாக தெரிகிறது.
மேலும், பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனும் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அம்பிகா சோனி குறித்து தீர்மானிப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடனும் இன்று சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications