கருணாநிதி மீது வழக்கு- பிரவீன் தொகாடியா
டெல்லி:
ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருக்கும் முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடருவோம் என்று விஷ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது,
தமிழக முதலமைச்சர் கருணாநிதி ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் 1972ம் வருடம் முதல்வராக இருந்தபோது வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட கெஜட்டில், அவர் எழுதிய முன்னுரையில் ராமர் பாலம் இருந்ததை ஒத்துக் கொண்டுள்ளார்.
ஆனால் ஈரோட்டில் நடந்த விழாவில் ராமர் பாலம் கிடையாது, அதெல்லாம் சதிகாரர்களின் கூற்று என்று கூறியுள்ளார். கெஜட்டில் எழுதியதை அவர் மறுத்ததால் அவர் மீது வழக்கு தொடரப்படும்.
இந்தப் பிரச்சனைக்கு குறிப்பிட்ட மத்திய அமைச்சரை மட்டும் பொறுப்பாக்குவது பெரிய தவறு. மத்தியில் அங்கம் வகிக்கும் முழு அமைச்சரவையும் இதற்கு ஒட்டுமொத்த பொறுப்பு. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் தொகாடியா.
பாஜக மூத்தத் தலைவரான வெங்கையா நாயுடு கூறுகையில்,
ராமர் பாலம் குறித்து நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு மத்திய மந்திரிகள் பரத்வாஜ், டி.ஆர்.பாலு, அம்பிகா சோனி ஆகிய 3 பேரும் தான் முழு பொறுப்பு. எனவே அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
ராமர் பால விவகாரத்தில் சாதாரண அதிகாரிகளை பலிகடா ஆக்கிவிட்டு மந்திரிகள் தப்பிக்கவிடக் கூடாது. மத்திய மந்திரிகள் 3 பேர் பதவி விலக வேண்டும் இல்லையெனில் அவர்களை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
கோடிக்கணக்கான இந்து மக்களின் மனதை புண்படுத்தியதற்காக பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications