'ராமர்': மத்திய அரசு கூறியதை பொறுத்து கொள்ள முடியாது - மோடி
ராஜ்காட்:
ராமர் குறித்து மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. 100 கோடி இந்தியர்களும் இதனால் கோபமடைந்துள்ளனர் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்காட்டில், நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மத்திய அரசு ராமர் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தது கண்டனத்துக்குரியது. இதை 100 கோடி இந்தியர்களும் ஏற்க மாட்டார்கள். குறிப்பாக குஜராத் மக்கள் ஏற்கவே மாட்டார்கள்.
குஜராத் அரசை விவசாயிகளுக்கு விரோதமான அரசு என்று காங்கிரஸ் கட்சி அவதூறாகக் கூறி வருகிறது. ஆனால் எனது அரசு விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல், விவசாய உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபம் அடைவதற்கும் விவசாயிகளுக்கு எனது அரசு உதவுகிறது என்றார் மோடி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications