ஸ்டாலின், கனிமொழிக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil


சென்னை:

முதல்வரின் மகள் செல்வியின் வீடு பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வரின் புதல்வர்களான அமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோரது வீடுகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள முதல்வரின் மகள் செல்வியின் வீடு சில விஷமிகளால் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. முதல்வரின் புதல்வர்கள், குடும்பத்தினர் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற பதட்டம் எழுந்துள்ளது.

இதையடுத்து முதல்வரின் மகன் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகள் எம்.பி. கனிமொழி ஆகியோரின் சென்னை வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு ஏற்கனவே பலத்த பாதுகாப்பு உள்ளது. தற்போது அது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கனிமொழியின் வீட்டுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வீடு உள்ள பகுதியில் நடமாடுவோரையும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுதவிர இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மதுரையில் உள்ள முதல்வரின் மூத்த மகன் மு.க.அழகிரி வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+