நெல்லையில் 'சரக்கு' தட்டுப்பாடு; கேரளா செல்லும் 'குடிமகன்கள்'!
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்கள் தட்டுப்பாடு நிலவுவதால் 'குடி மகன்கள்' எல்லை தாண்டி கேரளாவுக்குச் சென்று மது அருந்தி மகிழ்ந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மது பான கடைகள் 221 உள்ளன. இக்கடைகளில் நகர்புறத்தில் இருக்கும் கடைகளுக்கு வாரத்திற்கு 750 முதல் ஆயிரம் பெட்டிகளும், நடுந்தர நகரங்களுக்கு 350-400 பெட்டிகளும் விற்பனையாவது வழக்கம்.
ஆனால் கடந்த சில வாரங்களாகவே இக்கடைகளுக்கு சரக்கு அனுப்புவது வெகுவாக குறைந்து 10 முதல் 20 சதவிகிதம் வரையே அனுப்பப்பட்டு வருகிறதாம். மேலும் பார் ஏலம் எடுத்தவர்கள் பகுதிக்கு ஏற்ப தினமும் ரூ.1800 முதல் ரூ.3500 வரை பணம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனராம்.
அதுமட்டுமின்றி கடைகள் காலியாக இருப்பதால் பல பகுதிகளில் பார்கள் அடைக்கப்பட்டு விட்டனவாம். தென்காசி வட்டாரத்திலுள்ள 41 கடைகளில் கடந்த இரு தினங்களாக 'பீரைத்' தவிர வேறு எந்த சரக்கும் கிடைக்கவில்லையாம்.
'மது' இல்லாததால் அவதி அடைந்த பல குடிமகன்கள் ரயில் மூலம் அண்டை மாநிலமான கேரளாவுக்குச் சென்று குறைந்த விலையில் கிடைக்கும் 'சாரயத்தை' தேடிச் சென்று பாட்டில்களை வாங்கி வருகின்றனராம்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications