பெங்களூர் தாக்குதல் தொடர்பாக 22 பேர் கைது
பெங்களூர்:
பெங்களூரில் தமிழக பஸ் எரிக்கப்பட்டது, முதல்வர் கருணாநிதியின் மகள் வீட்டின் மீது நடந்த தாக்குதல் ஆகியவை தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் நகர கமிஷ்னர் அச்சுத ராவ் தெரிவித்துள்ளார்.
சம்பவங்கள் நடந்த இடங்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இரு சம்பவங்களையும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் பஸ் எரிப்பு தொடர்பாக 13 பேரையும், செல்வி வீடு மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 9 பேரையும் பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று விசுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மறுத்துள்ளன.
இரு மாநிலங்களுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மர்ம கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தெரிவித்தார்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் தற்போது பெங்களூர் மற்றும் கர்நாடக எல்லைக்குள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
மேட்டூரில் இருந்து மாதேசுவரன்மலை, மைசூர், கொள்ளேகால் ஆகிய பகுதிகளுக்கு நேற்று பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களும் வழக்கம்போல் சென்று வருகின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications