வீடியோ கான்பரன்சிங் மூலம் டைவர்ஸ்- சென்னை நீதிமன்றம் 'வரலாறு'
சென்னை:
அமெரிக்காவில் வசிக்கும் கணவருக்கும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மனைவிக்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் 15 நிமிடத்தில் டைவர்ஸ் வழங்கி தீர்ப்பளித்துள்ளது சென்னை நீதிமன்றம்.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கணவனும், மனைவியும் நேரில் ஆஜராகமலேயே விவாகரத்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிந்த கணவனும், மனைவியும் சாப்ட்வேர் என்ஜீனியர்கள். இருவருக்கும் வயது 25க்குள்தான். கல்யாணத்திற்குப் பிறகு இருவருக்கும் ஒத்துவரவில்லை. இதையடுத்து பிரிய முடிவு செய்தனர்.
இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர். சட்டப்படி இருவருக்கும் ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இந்த கால கட்டத்தில் கணவன் அமெரிக்காவுக்கும், மனைவி ஆஸ்திரேலியாவுக்கும் வேலை நிமித்தம் இடம் பெயர்ந்து விட்டனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களால் நேரில் ஆஜராக முடியாது என்றும் தங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜாராவார்கள் என்றும் நீதிமன்றத்திடம் இருவரும் முன் கூட்டியே தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து இருவரின் ரத்த தொடர்புடைய உறவினர்கள் நேரில் வருமாறும் (அடையாளம் காட்டுவதற்காக) நீதிபதி உத்தரவிட்டார். உறவினர்களும் நீதிமன்றம் வந்தனர். அவர்கள், விவாகரத்து கோரிய தம்பதிகளின் அடையாளங்களை உறுதி செய்து பிரமாணப்பத்திரம் கொடுத்தனர். அதன் பின்னர் வீடிேயா கான்பரன்சிங் தொடங்கியது.
கணவன், மனைவி ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அவர்களின் வாக்குமூலங்கள் ஆடியோ மற்றும் வீடிேயாவில் பதிவு செய்யப்பட்டது.
இருவரும் டைவர்ஸ் பெறுவதில் குறியாக இருந்ததால் டைவர்ஸ் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
மொத்தம் 15 நிமிடங்களில் இந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது. இந்த நடைமுறைக்கு மொத்தமே ரூ. 300 மட்டுமே செலவானதாக தெரிவிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications