'மன்மத' லியாகத்தின் மார்த்தாண்டம் வீட்டில் ரெய்டு-13 சிடிக்கள் சிக்கின!
மார்த்தாண்டம்:
நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய 'மைக்கேல் மதன காமராஜன்' லியாகத் அலிகான் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தங்கியிருந்த வீட்டில், போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 13 சிடிக்கள் சிக்கின.
சென்னையில் லியாகத் அலியின் வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார் எஸ்.ஐ சேகர் தலைமையில் இன்று மார்த்தாண்டம் வந்தனர். லியாகத் அலிக்கு வீடு எடுத்து கொடுத்த பழனி, வீட்டு உரிமையாளர் ரவீந்தரன் ஆகியோரிடமும் அப்பகுதியிலுள்ள பெண்களிடமும் விசாரணை நடத்தினர்.
பின்னர் லியாகத் அலி தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 சிடிக்களை கைப்பற்றினர். அவை ஆபாச சிடிக்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுவதால் அதனை சோதனைக்காக சென்னை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன.
பழனியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அலியின் மற்றொரு புதிய கூட்டாளியான மார்த்தாண்டம் டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் செய்யது அலி என்பவரை பற்றி தகவல் கிடைத்தது.
இதையடுத்து செய்யது அலியையும் தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் நடந்தப்பட்ட விசாரணையில் லியாகத் அலி தொடர்ச்சியாக மது குடிக்க வரும்போது செய்யது அலியுடன் பழக்கம் ஏற்பட்டதும், அவரிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டதும், செய்யது அலி வீட்டு புரோக்கர் பழனியை ஏற்பாடு செய்து கொடுத்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் லியாகத் அலி மார்த்தாண்டத்தில் தங்கியிருந்த நாட்களில் அப்பகுதியிலுள்ள இன்டர்நெட் சென்டர்களில் சாட்டிங் செய்துள்ளார்.
இதற்கிடையே லியாகத் அலி கடந்த 1 மாதத்தில் மட்டும் மார்த்தாண்டத்திலுள்ள ஸ்டார் லாட்ஜில் 4 முறை தங்கியது தெரிய வந்துள்ளது.
மேலும் இன்டர்நெட் சென்டர் அமைக்கப் போவதாக கூறி கல்லூரி மாணவிகளிடமும் லியாகத் அலி தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்துள்ளது. அந்த மாணவிகளின் பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications