கருணாநிதிக்கு இந்து முன்னணி 15 நாள் 'கெடு'!!
சென்னை:
ராமர் குறித்த தனது பேச்சுக்கு இன்னும் 15 நாட்களுக்குள் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்து முன்னணி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் முருகானந்தம்
வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
கருணாநிதி மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும், அனைத்து மதத்தினருக்கும் முதலமைச்சர் ஆவார். ஆனால் தொடர்ந்து இந்துக்களையும், இந்து மத நம்பிக்கைகளையும், இந்து பழக்க வழக்கங்களையும், இந்து நூல்களையும், இலக்கியங்களையும் இழிவுப்படுத்தி பேசி அவமானப்படுத்தி வருகிறார். ராமாயணமும் ஒரு நாவல் என்று சொல்லி அவர் அவமானப்படுத்தியுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இந்திய தண்டனைச் சட்டம் 195ன் பிரிவின் கீழ் எந்த மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது, அப்படி புண்படுத்தியவர்களுக்கு தண்டனை உண்டு.
ஆனால், முதல்வரே சட்டத்தை மதிக்காமல் தொடர்ந்து இந்துக்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல ராமரே இல்லை, ராமர் வாழ்ந்ததற்கான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.
கருணாநிதியின் தாத்தாவின் பெயர் என்ன? அவர் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை கருணாநிதியால் காட்ட முடியுமா?
ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கருணாநிதி கேட்கிறாரே. இது ஒரு தகுதியான மனிதர் கேட்கும் கேள்வியா? திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை கட்டியவர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார். இதே போல லட்சக்கணக்கான கோவில்களை கட்டிய கட்டிடக் கலையில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள், எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்கள்.
தனது பேச்சுக்கு இன்னும் 15 நாட்களுக்குள் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அவரது வீட்டின் முன் முற்றுகை போராட்டத்தில் இந்து முன்னணி ஈடுபடும்.
மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு கருணாநிதியே பொறுப்பாவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் முருகானந்தம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications