திமுக தாக்குதல் - பாஜக கண்டனம்
சென்னை:
பாஜக அலுவலகங்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப் போவதாகவும் அது கூறியுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம் விலாஸ் வேதாந்தி, முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்து ஃபாத்வா பிறப்பித்ததால் திமுகவினர் வெகுண்டுள்ளனர்.
இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கடுமையாக தாக்கப்பட்டது. இதில் பாஜக பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், போலீஸாரின் துணையுடன் பெரிய பெரிய கற்களை கொண்டு வந்து எங்களைத் தாக்கியுள்ளனர். கொடிக் கம்பத்தைப் பிடுங்கி எடுத்து தாக்கினர்.
இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த செய்தி மக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே காலை முதல் அனைத்துத் தொலைக்காட்சி சானல்களையும் தெரியவிடாமல் செய்து விட்டனர்.
ஒரு தேசியக் கட்சியின் அலுவலகத்தை இப்படித் தாக்கியுள்ளனர் என்றால் இதை விட மோசமான சம்பவம் இருக்க முடியாது என்றார் கோபமாக.
பாஜக துணைத் தலைவர் எச்.ராஜா கூறுகையில், பாஜக தலைமைக் கழக அலுவலகத்தை அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னிலையில் திமுகவினர் வெறி கொண்டு தாக்கியுள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது.
இந்த வன்முறையை அறிக்கை மூலம் தூண்டி விட்டவரான அமைச்சர் ஆற்காடு வீராசாமி, போராட்டத்திற்கு முன்னிலை வகித்த பரிதி இளம்வழுதி ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
இது தொடர்பாக ஆளுநர் பர்னாலாவை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications