ரவுடி உருண்டை ராஜன் என்கவுண்டர்; மனித உரிமை ஆணையம் விசாரணை!
நாகர்கோவில்:
கன்னியாகுமரியைக் கலக்கி வந்த பிரபல ரவுடி உருண்டை ராஜன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியது.
தெற்கு குண்டல் பகுதியைச் சேர்ந்தவன் உருண்டை ராஜன். பிரபல ரவுடி. இவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டான்.
கடந்த ஆண்டு விசாரணைக்கு கொண்டு வரும் வழியில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி விட்டான். போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் கல்லுவிளை பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அவனை சுற்றி வளைத்தனர்.
போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக கையெறி குண்டை வீசி தப்ப முயன்ற போது போலீசார் அவனை சுட்டு கொன்றனர்.
ஆனால் போலீஸார் திட்டமிட்டுக் கொன்று விட்டதாக உருண்டை ராஜனின் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து இது தொடர்பாக மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications