இலங்கையில் பயங்கர சண்டை-23 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்தினருக்கும் நடந்த சண்டையில் 23 விடுதலைப் புலிகளும், ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.
இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தின் கிலாலி பகுதியில் ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் பயங்கர சண்டை மூண்டது.
ராணுவத்தினர், முன்னேறி செல்லும் பாதையில் விடுதலைப் புலியினர் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 20 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ராணுவத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று ராணுவம் கூறியுள்ளபோதிலும் 2 உடல்களை மட்டுமே ராணுவம் மீட்டுள்ளது.
இதேபோல மன்னார் மாவட்டத்தில் நடந்த ஒரு சண்டையில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications