தமிழக சிஆர்பிஎப் காவலர் அசாமில் மர்ம சாவு
கன்னியாகுமரி:
அசாமில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை பார்த்து வந்த மனோ சிங் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
பூதப்பாண்டி அருகே ஞாலம் பகுதியை சேர்ந்தவர் மனோ சிங். இவரது மனைவி மாணிக்க செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனோசிங் அசாம் மாநிலம் கவுகாத்தியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணி புரிந்து வந்தார்.
சமீபத்தில் இவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சிலர் ஞாலம் பகுதிக்கு வந்து மனோ சிங்கை பற்றி விசாரித்து சென்றுள்ளனர்.
இந் நிலையில் மனோசிங் பணியில் இருந்தபோது இறந்து விட்டதாக அவரது குடும்பத்திற்கு திடீரென்று போன் மூலம் தகவல் வந்துள்ளது. இதைக் கேட்ட அவரது மனைவி மற்றும் பெற்றோர் கதறி அழுதனர். மனோ சிங்கின் சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் கூறினர்.
அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. மனோசிங்கிற்கு பதவி உயர்வு கொடுத்ததில் அவருக்கும் அதிகாரிகள் சிலருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விரோதத்தில் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது மனைவி, பெற்றோர் சந்தேகப்படுகின்றனர். மனோசிங்கின் உடலை பிரேத பரிசோதனை செய்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications