விரைவில் இனி ரயில்களிலும் ஏடிஎம்
பாட்னா:
ரயில்களில் ஏடிஎம் வசதியை ஏற்படுத்த இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இந்திய ரயில்வேயை நவீனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓடும் ரயில்களில் ஏ.டி.எம். வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
பயணிகளின் வசதிக்காக ஓடும் ரயில்களில் ஏடிஎம் மையங்களை ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்ேபாது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய பெருநகரங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரைவில் 1833 ஏடிஎம் மையங்களை திறக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஓடும் ரயில்களில் ஏடிஎம் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுதவிர ரயில் நிலையங்களில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு அருகிலேயே இ-டிக்கெட் முறையை வசதியை ஏற்படுத்தவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் முன்னணி வங்கிகள், ரயில்களில் ஏடிஎம் மையங்ளை நிறுவும். தனிப் பெட்டியில் இந்த ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். இதற்கு போதிய பாதுகாப்பும் அளிக்கப்படும். பாதுகாப்பான முறையில் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதும் உறுதி செய்யப்படும்.
ரயில்வே அமைச்சகத்தின் ஆய்வு, வடிவமைப்பு மற்றும் தர கழகத்தின் (ஆர்.டி.எஸ்.ஓ) யோசனையின்படி இந்த ஓடும் ரயிலில் ஏடிஎம் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம், குளோபல் பொசிசனிங் முறை மற்றும் குளோபல் மொபைல் கம்யூனிகேஷன் முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதுதவிர கான்பூர் ஐஐடியுடன் இணைந்து சிம்ரன் என்ற ரயில்வே திட்டம் ஒன்றின் ஆய்வையும் ஆர்.டி.எஸ்.ஓ மேற்கொண்டுள்ளது. ரயில்கள் போகும் திசையைக் கண்காணிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை முன்கூட்டியே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications