மும்பை திமுகவினர் மீதான தாக்குதலுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
மகாராஷ்டிர மாநிலத்தில் திமுக தொண்டர்களுக்கும், தமிழர்களுக்கும் அம்மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி, மகாராஷ்டிர அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். அம்மாநில முதல்வருடன் தொலைபேசியில் பேசி இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில், திமுக அலுவலகம் மீது பாஜகவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அலுவலகத்தை சூறையாடிய அவர்கள், திமுகவினரையும் சரமாரியாக தாக்கினர்.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மராட்டிய மாநிலத்தில் தாராவி பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி அதை வலியுறுத்துவதற்காக சியோன் பகுதியில் திமுக சார்பில் கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பாஜகவினராலும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினராலும், திமுக முன்னணியினரான அப்பாதுரை, ராஜேந்திரன், குமணராசன் உள்ளிட்டோர் பெருத்த தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாராவி பகுதியில் உள்ள திமுக அலுவலகமும் அதே கும்பலால் தாக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த முதல்வர் கருணாநிதி, மராட்டிய மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்குடன் தொலைபேசியில் உடனடியாக தொடர்பு கொண்டு திமுக அலுவலகத்திற்கும், தொண்டர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும், சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், கேட்டுக் கொண்டார்.
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று மராட்டிய முதல்வர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications