எஸ்.சி.விக்குப் போட்டியாக எம்.எஸ்.ஓ- கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திட்டம்
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். எஸ்.சி.வி. உள்ள அனைத்து இடங்களிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைவரும் இணைந்து தனியாக ஒரு எம்.எஸ்.ஓவை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சன் டிவியின் டிடிஎச் சேவையை எதிர்த்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சன் டிவி நிறுவனத்தை எதிர்த்து ஸ்டிரைக் நடத்திய அவர்கள் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.

சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் ஷகீலன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
அப்போது ஷகீலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சன் டிவியின் டிடிஎச் சேவை மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். இதை சட்டரீதியாக நாங்கள் எதிர்ப்போம்.
சன் குழுமத்தின் எஸ்.சி.வி. எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைவரும் இணைந்து தனியாக ஒரு எம்.எஸ்.ஓ.வை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இதேபால மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications