பாஜக அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ, திருநாவுக்கரசர் கண்டனம்
சென்னை:
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு முதல்வர் கருணாநிதியே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாஜக எம்.பி திருநாவுக்கரசர் ஆகியோர் கூறியுள்ளனர்.
சென்னையில் திமுகவினரால் தாக்குதலுக்கு ஆளான பாஜக அலுவலகத்தை நேற்று இரவு வைகோ நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வி.எச்.பி. பிரமுகர் வேதாந்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது, ஏற்புடையது அல்ல.
ஆனால் அதற்கு ஒரு கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையின்பேரில்தான், அவர் திட்டமிட்டுக் கொடுததே இந்தத் தாக்குதல் நடந்ததாக நான் குற்றம் சாட்டுகிறேன். இதற்கு கருணாநிதிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
முன்னதாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட வதத்தினரைப் பற்றி புண்படுத்தும் வகையில் முதல்வர் கருணாநிதி பேசியது வம்பை விலை கொடுத்து வாங்கியதாகும்.
அதேபால வட நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வேதாந்தி தமிழக முதல்வர் தலைக்கு விலை வைத்து அறிக்கை விட்டது கடும் கண்டனத்துக்குரியதாகும்.வேதாந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் அறவழியில் ஒரு இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம்.
ஆனால் பாஜக அலுவலகத்திற்கு முன்பு மறியல் என அமைச்சர் அறிக்கை விட்டதும், ஆயிரக்கணக்கானோர் உருட்டுக் கட்டைகளோடும், கற்களோடும் சென்று தாக்குதல் நடத்தியதும், முன்கூட்டியே திட்டமிட்ட அராஜகச் செயலாகும்.
இதற்கு கருணாநிதிதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். வன்முறை வெறியாட்டத்துக்குக் காரணமான அமைச்சர்கள், சென்னை மேயர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதாந்தி என்பவரின் தரம் கெட்ட வன்முறை பேச்சை பாஜக சார்பிலும், என் சார்பிலும் கடுமையாக கண்டிக்கிறேன்.
திமுக சார்பில் இந்தத் தவறான பேச்சை கண்டிக்க உரிமை உண்டு. ஆனால் கட்சியில் உள்ள திமுக போலீஸாரை பார்வையாளராக வைத்துக் கொண்டு தமிழ பாஜக அலுவலகத்திற்கு சென்று கல் வீசியும், செருப்பு வீசியும், அலுவலக கட்டடத்தை உடைத்தும், உள்ளிருந்த பாஜகவினரை தாக்க முயற்சித்தும் நடத்தியிருக்கிற சம்பவம் மிகுந்த கண்டனத்துக்குரியது, அநாகரீகமானது.
மாநில பாஜக துணைத் தலைவர் ராஜா வீடும், அவரது மாமியார் வீடும் காரைக்குடியில், தாக்கப்பட்டு வீட்டுக்கு முன்பு நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
ஜனநாயக நாட்டில் கருத்துக்களும், எதிர் கருத்துக்களும், அதையொட்டிய போராட்டங்களும் ஜனநாயக முறையில் அமைய வேண்டுமே தவிர தனியார் வீடுளிலும், கட்சி அலுவலகங்களிலும் வன்முறையை ஏவி விடுவதும், அதை போலீஸாரும், அரசும் வேடிக்கை பார்ப்பதும் திமுகவினருக்கு அகில இந்திய அளவில் கெட்ட பெயரையே ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் அவர்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications