புதைக்கப்பட்ட வாலிபர் உடல் தோண்டி எடுப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட வாலிபரின் உடலை போலீஸார் மீட்டு தோண்டி எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே செபத்தையாபுரத்திலிருந்து கூட்டாம்புலி செல்லும் மெயின் ரோட்டில் திருமலையாபுரம் தேரிக்காட்டு பகுதியில் சிறுவர்கள் மாடு மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது சற்று துரத்தில் நாய்கள் எதையோ இழுக்க முடியாமல் இழுத்து கடித்து குதறி தின்று கொண்டிருந்தன. அருகில் சென்று பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கே ஒரு கால் மட்டும் தெரியும் நிலையில் ஒரு ஆணின் உடல் புதைக்கபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஊரில் சென்று தகவல் தெரிவித்தனர். உடனே பொது மக்கள் கிராம நிர்வாக அதிகாரி முருகனிடம் சென்று கூறினர். அவர் இது குறித்து சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு திருவைகுண்டம் டி.எஸ்.பி மணி, ஏரல் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் அரிகரன், பெருமாள், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 7 மணியளவில் தூத்துக்குடி எஸ்.பி தீபக் டாமோர், தாசில்தார் வேலுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதைத் தொடர்ந்து தாசில்தார் வேலுசாமி முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
புதைக்கப்பட்டிருப்பவர் காக்கி நிற பேண்ட் அணிந்துள்ளதால் அவர் அரசு ஊழியராகவோ, அல்லது கார் டிரைவராகவோ இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications