கடனை 'ஏப்பம்' விட்ட வங்கி ஊழியருக்கு சிறை

Subscribe to Oneindia Tamil


தூத்துக்குடி:

வங்கியில் வீடுகட்ட கடன் வாங்கி அதை கட்டாமல் ஏமாற்றிய வங்கி ஊழியருக்கு நீதிமன்றம் சிறைதண்டனை விதித்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் பிரபாகரன். இவர் பிரகாசபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

பிரபாகரன் தான் வேலை பார்க்கும் கூட்டுறவு வங்கியில் கடந்த 2003ம் ஆண்டில் தனது மனைவி பெயரில் வீடு கட்டுவதற்கு ரூ.7 லட்சம் கடன் பெற்றார்.

ஆனால் வங்கியில் வாங்கிய கடனுக்கு இதுநாள் வரை தவணைத் தொகையை செலுத்தவில்லை. கடன் பெற்று வட்டி செலுத்தாததால் வட்டியும், அசலும் சேர்ந்து ரூ.8 லட்சத்து 49 ஆயிரத்து 825 ஆனது.

இதனால் பிரபாகரன் தவணைத் தொகைக்கு அதே வங்கிக்கா செக் ஒன்றை கொடுத்துள்ளார். இதில் பணம் இல்லையென திரும்பி வந்ததால்
வங்கி நிர்வாகம் போலீசில் புகார் செய்தது. பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய், பிரபாகரனுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+